தேவையில்லாத மாமன்றத்தில் சர்ச்சைகளை பேச வேண்டாம் -விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் தங்களுக்குப் பல கொடுமைகள் நடந்ததாகத் தெரிவித்துள்ளார். அதில் காவலர்கள் தாக்கியதில் தனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்ததாகவும், தனது தாடை எலும்பு உடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
யார் தன்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என்றும், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று தனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள் என்று கூறியுள்ளார். சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு மன்னிப்பு என்று தன்னிடம் கூறினீர்களே?, அதற்கு நீங்கள் இப்போது மாநில முதல்வர், கண்ணியத்தோடு பேசுங்கள் என அறிவுறுத்தினேன் அதை மறுந்துவிட்டீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *