Karnataka Sexual Assault: பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை!

Advertisements

நிலப்பிரச்சினையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திகடி கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு, அவரது மாமா தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்யக் கொடுத்திருந்தார். அதன்படி, அந்தப் பெண்ணும் அங்கு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவியான கல்பனா என்பவரின் கணவர் கல்லப்பா, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியதுடன், அங்குத் தண்ணீர் குழாய்களைப் பதித்திருந்தார்.

அந்தக் குழாயிலிருந்து அடிக்கடி தண்ணீர் கசிந்து அந்தப் பெண்ணின் நிலத்திற்கு சென்றதுடன், அங்குப் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்து வந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அந்தப் பெண் கொண்டு சென்றிருந்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தில் பதிக்கப்பட்டு இருந்த தண்ணீர் குழாய்கள் வெளியே எடுத்து அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண்ணுக்கும், கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக பைலஓங்கலா போலீஸ் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த கல்லப்பா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் அந்தப் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்தும் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி 2-வது முறையாகவும் அவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். இதையடுத்து, நடந்த சம்பவங்கள்குறித்து பெலகாவி மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்தப் பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-நிலப்பிரச்சினையில் தனது ஆடைகளை அவிழ்த்துப் பஞ்சாயத்து தலைவரின் கணவர் உள்பட 20 முதல் 25 பேர் தாக்குதல் நடத்தினார்கள். பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அடைத்துச் சிறை வைத்ததுடன், அங்கு வைத்தும் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தும்போது எனது உடலில் கையை வைத்துப் பாலியல் தொல்லையும் கொடுத்தார்கள். காலால் மிதித்துத் தாக்கினார்கள்.

அத்துடன் எனது செல்போன், பணத்தையும் பறித்துக்கொண்டனர். சம்பவத்தை வெளியே கூறக் கூடாது எனத் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அதில் அவர் கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்து தலைவி கல்பனாவின் கணவர் கல்லப்பா உள்பட 20 பேர்மீது மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலப்பிரச்சினையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *