
ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்துக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் போர் தொடுத்து ஈரானை ஆக்கிரமிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த ஆண்டு போரில் இருந்து அமெரிக்கா தக்க பாடங்களை கற்றுக்கொண்டது என்றார்.
தங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், வான் மற்றும் கடல் பரப்பில் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும், சக்தி வாய்ந்த பதிலடிக் கொடுக்கத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்று கூறினார்.

