மேகேதாட்டு அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட திருமா வலியுறுத்தல்.!

மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்கத் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதச்சார்பின்மையைக் காப்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தில் மதவாதச் சக்திகளுக்கு இடமில்லை என்பதைத் தேர்தலில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்கத் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *