உருவக் கேலியை விட்டுட்டு கொள்கையோடு வாங்க : கீர்த்தனா அதிரடி சவால்.!

Advertisements

விமர்சனம், உருவக் கேலி ஆகியவற்றை விட்டுவிட்டுக் கொள்கை அடிப்படையில் தன் பக்கத்தில் நின்று பேச முடியுமா? என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, திமுகவின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் 25 நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து கைவிட்டுச் சென்றதாகவும், அப்போதைய தொழில்துறை அமைச்சர் ராஜாவின் தம்பி கமிஷன் கேட்டது தான் அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

தன் மீதான விமர்சனம், உருவக் கேலியை விட்டுவிட்டுக் கொள்கை அடிப்படையில் தன் பக்கத்தில் நின்று திமுகவினர் பேச முடியுமா? என்றும் அமைச்சர் கீர்த்தனா சவால் விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *