Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

Advertisements

பிரபல திரைப்பட் நடிகரும், தேமுதிக தலைவருமான  விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த  மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை முன்பு கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீருடன் கூடியுள்ளனர்.

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த  நிலையில்  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

திடீரென்று அவருக்கு  மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக   தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. காவல் உதவி ஆணையர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் விஜயகாந்த் வீட்டின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை 9 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியிடப் போவதாக அறிவித்த நிலையில்  விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

தற்போது  விஜயகாந்த்   சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கண்ணீருடன் மருத்துவமனை முன்பு குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வ தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரது மனைவி பிரேமலதா கட்சியின் பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது  அவரது உடல். வீட்டின் முன்பும் தொண்டர்கள் புடை சூழ அழுகுரல் ஒலித்துக் கொண்டுள்ளதால் பார்ப்போர் நெஞ்சை கனக்கச் செய்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லம் முன்பு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில்  அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது தேமுதிக கட்சி கொடிக் கம்பத்தில் கொடி அரைககம்பத்தில் பறக்க  விடப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. திரையுலக  பிரபலங்களும்  கண்ணீருடன் வருகை பிருந்து கொண்டுள்ளனர்.

குறுகிய கால அரசியல் பிரவேசத்தில் அடித்தளம் ஆழமாகப் பதித்திட்ட ஒரு மாமனிதர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை  எதிர்த்து போட்டியிட்டு எதிர்கட்சித்தலைவராக கோலோச்சியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்சித்தலைவர்களும் ஆழ்ந்த இரன்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *