Kaniyakumari : டாஸ்மாக் கடை திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் பரபரப்பு.!

கன்னியாகுமரி  அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடை திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து கட்சியினரும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் பாஜக, அதிமுக, காங்கிரஸ், ஜனதாதளம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மது வாங்க வந்தவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *