பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் நினைக்கிறார்கள் – ஆர்.என்.ரவி!

Advertisements

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாநாட்டினை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும். பெண்கள் தற்போது பட்டம் பெற்று விட்டார்கள். தங்கபதக்கம் பெறுகிறார்கள்.

ஆனால் வேலை செய்யும் இடங்களில் அவர்களுடைய இடம் குறைவாகவே உள்ளது.

பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளிடம் பேசுவேன். அப்போது பெண்கள் பலரும் கண்களில் கண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்கமாட்டேன் என்று கூறுவார்கள்.

சென்னைக்கு சென்று படிப்பது பாதுகாப்பில்லை என்று தங்களது பெற்றோர் கருதுவதாக அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள்.

இதுதான் தற்போது இருக்கக்கூடிய பிரச்சனை.

சென்னை நகரத்தைப் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும். நகரங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படித்த பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *