நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்று தங்கம் தென்னரசு பேச்சு.!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பிசிண்டி கிராமத்தைக் கடக்கும் குண்டாற்றில் தடுப்பணைக் கட்டுவதற்கு 23 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று அடிக்கல் நாட்டில் பணிகளைத் தொடங்கி வைத்தார். இதேப்போல், காரியாபட்டியில் கால்வாய் புனரமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டினார்.

அப்போது, பேசிய அவர் தம்முடைய தொகுதியில் மட்டும் இந்த நான்கரை ஆண்டுகளில் நீர் பாசனத் திட்டங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறினார்.

மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் மிகச் சிறந்த முதலமைச்சர் என்றும், நம்பர் ஒன் முதலமைச்சர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *