ஆதவ் அர்ஜுனாவை சரமாரியாக விளாசி தள்ளிய ஆர்.பி. உதயகுமார்.!

ஆள் பிடிக்கும் வேலையை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ‘அதிமுகவின் 90 சதவீதத் தொண்டர்கள் தவெக-வில் இணையப் போவதாகக் கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர்’ என்று குற்றம் சாட்டினார்.

உங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா அல்லது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதிமுக ஒரு சுயம்பு இயக்கம் என்றும் அதிகாரம், பதவி, சுகம் ஆகியவற்றிக்காக உருவாக்கப்பட்டது அல்ல இது புரட்சித்தலைவர் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எல்லாம் தோற்றுப் போய் தான் உள்ளார்கள் என்றார். யானை தன் தலையில் மண்ணை போட்டுகொண்டது போல நீங்கள் உங்கள் அழிவிற்கு முயற்சிக்கிறீர்கள் என்றும் ஆள் பிடிக்கும் வேலையை தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டால் கடும் விளைவுகளை பின்தொடர நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *