மராட்டியத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு.!!

Advertisements

மராட்டியத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேரும், புனே நகரின் காலே படல் பகுதியில் 3 பேரும், ஹடாப்சர் பகுதியில் 2 பேரும் என 18-பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை யோகேஷ்-வான்கடே என்பவர் தயாரித்ததாகவும், அவர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக யோகேஷ் வான்கடேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மராட்டியத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தேவேந்திர-பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் ஆணையர்களுக்கு அவர் நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *