
பெருநகர் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாநடைப்பெற்றது. இதில், தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக உத்திரமேருர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நல் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சியும் நடன நிகழ்ச்சியும் மற்றும் 10,12 ஆம் வகுப்பில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடயமும் தலைமை ஆசிரியர் வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் பேரூர் செயலாளர் பாரிவள்ளல் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஒன்றிய துணை செயலாளர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



