நாகர்கோவிலில் கஞ்சா வேட்டை..!

Advertisements

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் மற்றும்  2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல்  செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை செய்பவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 1 கிலோ 360 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் 2 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கைது நடவடிக்கையானது தீவிரபடுத்தப்படும் என்றும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *