
தமிழ்நாட்டில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கு எதிரான அத்துமீறல் போவார்கள் கோவிந்த வண்ணம் இருக்கின்றன.
போலீசார் ஒருவரை கைது செய்தால் அந்த கல்விக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை மிராண்டா உரிமைகள் என்று அழைக்கிறார்கள்.
🔹 மிராண்டா உரிமைகள் (Miranda Rights) என்றால் என்ன?
மிராண்டா உரிமைகள் என்பது, ஒரு நபர் கைது செய்யப்படும்போது போலீசார் அவருக்கு சொல்ல வேண்டிய சட்ட உரிமைகளை குறிக்கும். இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஒரு சட்ட நடைமுறை ஆகும்.
இது 1966ஆம் ஆண்டு அமெரிக்க உயர் நீதிமன்றத்தால் நிறுவப்பட்டது.
என்ன ஸ்டுடியோ மிராண்டா – அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்.1963-இல், அவர் மீது ஒரு பெண்ணை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டபோது,
• போலீசார் அவரது உரிமைகள் குறித்து எதுவும் கூறவில்லை.
• வழக்கறிஞரின் உதவி பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.
• அவரிடம் ஒரு ஒப்புதல் (Confession) வாங்கப்பட்டது – ஆனால், அது முழுமையாக அழுத்தத்தினால் பெறப்பட்டது.
இந்த ஒப்புதலின் அடிப்படையில், முதற்கட்ட நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
⚖️ மிராண்டா, அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.அங்கு நீதிபதிகள், அவரது உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன எனக் கண்டனர்.
உயர் நீதிமன்றம் கூறியது:
“ஒரு கைதியின் வாயிலாகப் பெற்ற ஒப்புதலுக்கு முன்னர்,
அவனுக்கு தன் உரிமைகள் பற்றி தெளிவாக அறிவிக்கப்படவேண்டும்.இல்லையெனில், அந்த ஒப்புதல் நீதிக்குத் தவறு ஆக்கும்.”
இதிலிருந்து பிறந்ததே Miranda Warning என்று கூறப்படும் மிராண்டா எச்சரிக்கை!
🔸 போலீசார் கூறி இருக்கவேண்டிய உரிமைகள் விவரம்:
1. “You have the right to remain silent.”
(நீங்கள் மௌனமாக இருப்பதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.)
2. “Anything you say can and will be used against you in a court of law.”
(நீங்கள் கூறும் எந்தவொரு உரையும், நீதிமன்றத்தில் உங்கள் எதிராக பயன்படுத்தப்படும்.)
3. “You have the right to an attorney.”
(உங்களுக்கு ஒரு வழக்கறிஞர் உதவி பெறுவதற்கான உரிமை உள்ளது.)
4. “If you cannot afford an attorney, one will be provided for you.”
(நீங்கள் வழக்கறிஞரை நியமிக்க முடியாவிட்டால், அரசு உங்களுக்கு ஒருவரை நியமிக்கும்.)
🔹 இந்த உரிமைகள் ஏன் முக்கியம்? என்பதற்கும் நீதிமன்றம் விளக்கம் அளித்தது.
இந்த உரிமைகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தன்னைத் தானே பழி ஏற்க வைக்கும் விதமாக மானசீக அழுத்தம் அடையாமல் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டவை.
அந்த நபர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் எதிராக வழக்கில் பயன்படுத்தப்படும் என்பதால், அவருக்கு முன்னரே இது தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
மிராண்டா உரிமைகள் கூறப்படாமல், போலீசாரால் பெறப்பட்ட ஒப்புதல்/மூலக்குறிப்பு (confession) நீதிமன்றத்தில் சரியான சாட்சியாக ஏற்கப்படமாட்டாது.
🎭 இந்த வழக்கின் இறுதிக் கட்டமாக
உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்பைத் தவிர்த்தாலும்,
மிராண்டாவுக்கு மீண்டும் விசாரணை (retrial) நடந்தது.
அந்த நேரத்தில், மற்ற சாட்சிகள் மற்றும் பழைய காதலியின் சான்று மூலம்
👉 மிராண்டா மீண்டும் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார்.
👉 அவர் சிறை தண்டனை பெற்றார்.
👉 சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெற்றார்.
ஆனால் 1976ல், ஒரு தகராறில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
அவரது கொலையாளியை கைது செய்த போலீசார், மிராண்டா உரிமைகள் தெரிவிக்காமையால்,
அவரிடம் பெற்ற ஒப்புதலை வழக்கில் பயன்படுத்த முடியவில்லை.
👉 அந்த நபர் விடுதலையடைந்தார். இதுதான் மிராண்டா உரிமைகள் பற்றிய பின்னணி.
செய்தி தொகுப்பு :செந்தூர் பாண்டியன்




