Home Guard: உடல் தகுதித்தோ்வு தொடங்கியது!

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள ஊா்க்காவல் படைக்கு விண்ணப்பித்தவா்களுக்கான உடல் தகுதித்தோ்வு இன்று கோரிமேடு காவலர் மைதானத்தில் தொடங்கியது.

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள ஊா்க்காவல் படைக்கு 420 ஆண்கள், 80 பெண்கள் என மொத்தம் 500 போ் தோ்வு செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 15,697ஆண்களும், 4,492 பெண்களும் என மொத்தம் 20,189 போ் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு காவலர் மைதானத்தில் இன்று தொடங்கியது.இத்தேர்வினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டன. அதன்பிறகு உடல்திறன் தேர்வு நடைபெற்றது.இதனை காவல்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ்,காவல்துறை துணை தலைவர் பிரஜேந்திர குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். காவல் மைதானத்தில் நடைபெறும் அனைத்து தேர்வு முறைகளும் சிசிடிவி மூலம் காண்காணிக்கப்பட்டு வருகிறது.

உடல் தகுதித் தோ்வானது ஆண்களுக்கு வரும் 19-ஆம் தேதி வரையிலும், பெண்களுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படவுள்ளன. உடல் தகுதித் தோ்வு தொடங்கும் முதல் 2 நாள்களில் சுமாா் 500 பேருக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, தினமும் 1,000 போ் வரை பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *