
திண்டிவனத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் செஞ்சிமஸ்தான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அதிநவீன பேருந்து நிலைய வளாகம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பணிகள் தரமாகவும்விரைவாகவும் கட்டி முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து திண்டிவனம் சந்தை மேடு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவு சார் மையத்தினைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அறிவு சார் மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவு சார்மையத்தில் அமர்ந்து புத்தகத்தை வாசித்தார்.
மேலும் அரசு அறிவித்துள்ள போட்டி தேர்வுகளில் பங்கு பெறும் மாணவ மாணவிகள்அறிவு சார் மையத்திற்கு வருகை தந்துபோட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை படித்து வருகின்றனர்.
அறிவு சார் மையத்தில்போட்டித் தேர்வுக்கு படித்த மாணவர் சேட்டு கூறுகையில்:தமிழக அரசு அறிவித்துள்ள குருப் தேர்வுக்கு என்னைப் போன்ற மாணவர்களுக்கு அறிவுசார் மையம் பெரும் உதவியாக உள்ளதாகவும் இந்த மையத்தில் போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வைத்துள்ளதாகவும் அனைத்து வசதிகளையும் இந்த அறிவுசர் மையத்தில் தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளதாகவும் இதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உடனிருந்தார்.

