Akhilesh Yadav: மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை ஹிட்லர் அரசுடன் ஒப்பிட்ட அகிலேஷ் யாதவ் ஹிட்லரை போல் மோடியின் பாசிச ஆட்சியும் 10 ஆண்டுகள் தான் இருக்கும். அவரது ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன எனத் தாக்குதல் தொடுத்தார்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றும் முக்கியமான போர் என்றும் அவர் வர்ணித்தார்.

லக்னோவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-“ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சிக்கு இணையாக நரேந்திர மோடியின் பாஜக அரசு உள்ளது. ஹிட்லரின் ஆட்சி கூடப் பத்து ஆண்டுகள் தான் நீடித்தது.அதேபோல் மோடியின் பாசிச பாஜக அரசு 10 ஆண்டுகள் தான் நீடிக்கும். ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது. அதன் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

கடந்த 2014 இல் ஆட்சிக்கு வந்த அவர்கள் 2024 வெளியேறுவது நிச்சயம். நடைபெற இருக்கும் தேர்தல் அரசியல் அமைப்பு, ஜனநாயகம், இட ஒதுக்கீடு மற்றும் ஒருவரின் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கானது.

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் விவசாயிகள் இறந்துள்ளனர். “இந்தியா கூட்டணி” ஆட்சி பொறுப்பை ஏற்றால் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டபூர்வ உத்தரவாதத்தை உறுதி செய்யும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானவை”.
இவ்வாறு மோடி கூறினார்.

சிறுபான்மையினர் என்பதால்வய நாட்டில் ராகுல் போட்டியா?

அகிலேஷ் யாதவ் தனது பேட்டியின்போது,  “நாம் ஒவ்வொருவரும் சிறுபான்மை இனத்தவர் தான்; பலவீன பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.

டெல்லியில் நேற்று சாலையோரத்தில் தொழுகை நடத்தியவர்கள்மீது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைத்தள பதிவில் “பிரார்த்தனையின்போது தாக்கப்படுவது நல்லதல்ல” என்று ஒரு வரியில் குறிப்பிட்டிருந்தது வைரலாகப் பரவியது. இது தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை எட்டி உதைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பற்றிய வைரல் வீடியோவுக்குத் தக்க வகையில் பதில் அளிப்பதாக அமைந்து இருந்தது.

பேட்டியின்போது ஒரு நிருபர், “ராகுல் காந்திக்கு சிறுபான்மை இனத்தவரை மிகவும் பிடிக்கும் என்பதால் தான் அந்தச் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் வயநாடு தொகுதியில் போட்டி இடுவதாக” பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியது பற்றிக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த அகிலேஷ் யாதவ், “நாம் ஒவ்வொருவருமே சிறுபான்மையினர் என்று தான் நான் சொல்வேன். நாம் அனைவருமே பலவீனமான அநீதிக்கு உட்படுத்தப் பட்டவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *