Delhi High Court:அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அம்மாநில முதல்வரான கெஜ்ரிவாலை கைது செய்தது. அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும்போது அவரிடம் விசாரணை நடத்தி சிபிஐ கைது செய்தது.

சிபிஐ தன்னை கைது செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், ஜாமின் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடலாமெனத் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஜாமின் கிடைக்காமல் ஜெயலில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *