
போளூர் தாலுகாவில் பள்ளிகள், விடுதிகள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்களை புதியதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் இன்று போளூர் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தை ஆய்வு செய்தார், வேளாண்மை துறையின் செய்யல்பாடுகள் , பயிர் சாகுபடி பரப்பு , பண்ணை குடும்பம் , விவசாயிகள் விவரம் ,பணியாளர்கள் விவரம் பதிவேடு , கழிவறைகள் பயன்பாடு , விவசாயிகள் வருகை விவரம் ஆய்வு செய்தார். பின்னர் சேமிப்பு கிடங்கில் விதைகள் இருப்பு , விவசாயிகள் விரும்பும் விதை ரகம் மற்றும் உயிர்உரங்கள் , நுண்ணூட்ட கலவை பயன்பாடுகள் , இருப்பு விவரம், விலை பட்டியல் , மற்றும் இருப்பு பதிவேடு பார்வையிட்டார் .
மேலும் இயற்கை விவசாயம் விரும்பும் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார் . மேலும் கிடங்கில் இருப்பு பதிவேடு , வருகை பதிவேடு மற்றும் பணபதிவேடு ஆய்வு செய்தார். போளூர் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் துறையின் செயல்பாடுகள் திட்டங்கள் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வடமாதிமங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமைந்து உணவருந்தினார் அவர்களின் கற்றல் திறனுக்கு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் டாக்டர்கள் வருகை காலியிடம் நோயாளிகளிடம் விசாரணை செய்து பாம்பு கடி தேள் கடி போன்றவற்றிற்கு மருந்து இருக்கின்றதா எது போன்ற விஷ ஜந்துக்கள் மக்களை தாக்குகின்றது என மருத்துவரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



