K. Ponmudy – DMK: 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும்.. பொன்முடி நம்பிக்கை!

Advertisements

நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிப் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக அறிவித்திருந்த நிலையில். இன்று விழுப்புரத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு பேச உள்ளார்.

இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைப் பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அப்போது பேசிய அவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் தெரிவித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளாகப் பிஜேபி ஆட்சியின் துயரங்களையும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குறைபாடுகளையும் எடுத்துரைக்கும் வண்ணம் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார். இந்தக் கூட்டம் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் இளைஞர் அணி மாணவர் அணி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *