ரஷ்யாவின் குண்டுமழை:பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமெரிக்கா..!

Advertisements

உக்ரைன் மீது ரஷ்யா குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைனுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீரேற்றும் நிலையங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகிறது.
நேற்றிரவில் ரஷ்ய ராணுவம் 653 டிரோன்கள், 51 ஏவுகணைகள் மூலம் குண்டு வீசித் தாக்கியதாகவும், இவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்துத் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் செய்யும் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், உக்ரைன் தேசியப் பாதுகாப்பக் கவுன்சில் செயலாளர் ருஸ்தம் உமராவுடன் பேச்சு நடத்தி வருகிறார்.
இந்தப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *