K. N. Nehru: அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

Advertisements

ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், ‘நீங்கள் தான் வருங்கால முதல்வரே’ என அர்ச்சகர் கூறியதும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கே.என்.நேரு, ‘என்னைய வீட்டுக்கு போகச் சொல்லிடுவீங்க போல’ என நகைச்சுவையாக கூறினார்.

திருச்சி: ஶ்ரீரங்கத்தில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மூலதன மானிய நிதி 2023-24 ன் கீழ் ரூ.11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், ”சென்னையில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்கும் தண்ணீர் இல்லை. ஆவடி பகுதியில் முற்றிலுமாக சரி செய்து விட்டோம். சும்மா ஏதாச்சு கிளப்பி விடாதீங்கய்யா…” என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

தொடர்ந்து பார்லி.,யில் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் பற்றி கேட்டதற்கு, ”நாங்கள் லோக்கல்ல ஸ்ரீரங்கத்தில் இருக்கிறோம். எங்க கிட்ட போய் பார்லிமென்ட் பற்றி கேட்கிறீர்களே…” என்றார். அப்போது, உற்சாகமாக இருந்த அமைச்சர், சீக்கிரம் கட்டடம் எழும்பாவிட்டால், அர்ச்சகரை திட்டுவேன் என்றும் செல்லமாக கூறினார்.

உடனே, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அர்ச்சகர், ”அண்ணா, நீங்க தான்ணா வருங்கால முதல்வரே… நீங்க நெனச்சா எல்லாமே நடக்கும்ண்ணா” என்றார். இதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர், ”யோவ்… என்னைய வீட்டுக்கு போகச் சொல்லிடுவீங்க போல” என்றார்.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ., பழனியாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *