Robbery: பிரபல கொள்ளைக்காரி சிக்கினார்!

Advertisements

சேலம் சங்ககிரி அருகே மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து வீடுபுகுந்து நகை, பணம் திருடிய பிரபல கொள்ளைக்காரி ஓராண்டுக்குப்பின் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி மாரியம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் ராமசாமி.இவரது வயது 87.மனைவி குப்பம்மாளுடன் வசித்துக் கொண்டு,வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி மதியம்,40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ராமசாமியின் கடைக்கு வந்து வடுகப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும். கோயில் பூட்டி உள்ளது, பூசாரியின் போன் எண் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

இதன்பின்னர் அந்த பெண் ராமசாமியிடம், ஒரு சிப்பம் அரிசி விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை கொடுத்து விட்டு இங்கே சிறிது நேரம் நிற்கிறேன் என கூறியுள்ளார். ராமசாமியும் அதை நம்பி வீட்டிற்கு வெளியே வந்து கோயில் பூசாரியின் போன் நெம்பரை டைரியில் தேடிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட் டுக்குள் சென்ற அப்பெண் பீரோவை திறந்து 9 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் சத்தம் இல்லாமல் நழுவிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து சந்தேகம் அடைந்த ராம சாமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 9 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை தேடியபோது சற்று தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த மொபெட்டில் தப்பிச் சென்றது அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

ராமசாமி உடனடியாக சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.ஓராண்டுக்குப்பின் விசாரணையில் அப்பெண் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைவட்டம், சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த மைதிலி என்பதும், வேறொரு வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருப்பதும், இவர் பிரபலமான கொள்ளைக்காரி என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து மைதிலியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்றனர். அதன்படி ஒருநாள் நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் காவலில் எடுத்து,சங்ககிரி உதவி ஆய்வாளர் பழனிசாமி, பெண் காவலர்கள் உதவியுடன் விசாரணை செய்தார்.அப்போது மைதிலி ராமசாமி வீட்டில் நகை, பணம் திருடியதை ஒப்புக் கொண்டார்.

மேலும், அந்த பணத்தை குடும்பத்துடன் ஜாலியாக செலவு செய்துவிட்டேன். 2 பவுன் தங்க செயினை தீவட்டிப்பட்டியில் ஒரு நகை கடையில் விற்று விட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து சங்ககிரி காவல்துறையினர் 2 பவுன் நகையை மீட்டனர்.மைதிலியை சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் வேலுார் பெண்கள் தனிச்சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *