Government Medical College Tiruppur: குப்பை கூடமாக மாறிய அரசு மருத்துவமனை.. நோய் பரவும் அபாயம்!

Advertisements

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஊழியர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகம் குப்பைகள் நிறைந்தும் துர்நாற்றம் வீசி மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் 725 ரூபாய் வழங்கிட வேண்டும், பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்று அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பு தூய்மை மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் தங்கள் பணிகளைப் புறக்கணித்து மாவட்ட பதாகைகளை ஏந்தியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரப் பணிகள் துறை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணிகள் பெறாததால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வார்டில் மிகவும் துர்நாற்றம் வீசியும் இதனால் நோயாளியுடன் வந்திருப்பதற்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும், குடிநீர், போன்ற பிரச்சனைகளும் உள்ளதாகவும், விரைவில் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *