Joe Biden: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்!

Advertisements

அனைத்து  உதவிகளையும் செய்யத் தயார்! ஜோப்பைடன்…

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து  உதவிகளையும்  அமெரிக்கா செய்து தரும் என்று அதிபர் ஜோப்பைடன் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 12-வது நாளாக நீடிக்கும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார். இந்த நிலையில் காசா நகர் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் இஸ்ரேல் வந்துள்ள நிலையில் அந்நாட்டு விமானப்படை காசா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதனிடையே  அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஐ.எஸ் அமைப்பின் பாதையை அப்படியே ஹமாஸ் அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர். ஹமாஸ் படையினர் தற்போதைய நாஜிப்படைகளாக மாறி இருக்கின்றனர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டி உள்ளார். ஹமாஸ் படையினர் இதுவரை 1400 இஸ்ரேலியர்களை கொன்றுள்ளதாகப் பைடனிடம் நெதன்யாகு தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஒத்துழைப்பிற்கும் உதவிகளுக்கும் நன்றியென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா தரும் என்று அதிபர் ஜோப்பைடன் அறிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *