Jharkhand:மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!

Advertisements

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனுமீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.

இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் கட்சியின் இந்த முடிவில் முதலமைச்சர் சாம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *