
சென்னை: ‘அ.தி.மு.க., வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்’ எனச் சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது: ஜெயலலிதா ஆட்சியின்போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.
90% நிறைவு
அ.தி.மு.க., வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சுற்றுப்பயணம் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி தான் போகப் போறேன். அப்பொழுது நீங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். தமிழக போலீசார் சரியாகச் செயல்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

