Paris Olympic Wrestling; காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

Advertisements

இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.

பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்திப் பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் தொடரில் மல்யுத்தம் – பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் யுய் சுசாகியை வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *