பாஜகவின் வாக்குத் திருட்டு வாலாட்டல்கள் தமிழ்நாட்டில் இருக்காது.!

பாஜகவின் வாக்குத் திருட்டு வாலாட்டல்கள் தமிழ்நாட்டில் இருக்காது என்று காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் அருகே வாக்குத் திருட்டைக் கண்டித்துக் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இயக்கத்தைத் தொடங்குமுன் மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பதாகையில் அனைவரும் கையெழுத்திட்டனர். அதன்பின் அங்கிருந்த கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமும் கையெழுத்துப் பெற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்குத் திருட்டு வாலாட்டல்கள் இருக்காது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *