கர்நாடகத்தைப் போல தமிழக கட்சிகளும் ஒன்றுசேர சபாநாயகர் கோரிக்கை.!

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு இருப்பது போல தமிழகத்திலும் அனைத்து கட்சியும் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் அருண்ராஜ் பேசியபோது, காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பாக என்ன செய்தீர்கள் என எதிர்கட்சிகளை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக, திமுக அரசாங்கம் தொடர்ந்து காவிரி நீருக்காக போராடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். காவிரி பிரச்சனை குறித்து 1987-ல் முன்னாள் எம்ஜிஆர் காலத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு,  காவிரி விவகாரத்தில் யாரும் எந்த துரோகமும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். காவிரி பகுதியில் பிறந்து வளர்ந்த தான் விவசாயிகளின் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், காவிரி பிரச்சனையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *