Jacto Geo Organization: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது!

புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை போலீசார் கைதுசெய்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் சாலையில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *