
தமிழகத்திற்கு 25 ஆரம்ப சுகாதார மையங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது என்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ரூபாய் 2 கோடியே 13 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் சி பழனி தலைமையில்அரசு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மாச்சுப்பிரமணியம் மற்றும் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு ரூபாய் 2 கோடியே 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஏழு புதிய மருத்துவமனை கட்டிடங்களை அமைச்சர் மாச்சுப்பிரமணியம் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவ உதவி நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினர் சிறந்த மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மாச்சுப்பிரமணியன் கூறுகையில்: ரூபாய் 2 கோடியே 13 லட்சம் மதிப்பில் மாவட்டம் முழுவதும் புதிய ஆரம்ப சுகாதார மையக் கட்டிடங்கள் ஏழு கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனை கூடுதல் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிலேயே அதிகமாகத் தமிழகத்தில் தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 சுகாதார மையங்கள் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு சுகாதார மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
மேலும்மகப்பேறு மரணம் இந்தியாவில் தமிழகத்தில் தான் மிகவும் குறைவு, அதுவும் பூஜ்ஜயமாகக் கொண்டு வருவதற்காகத் தான் மருத்துவத்துறை இயங்கிகொண்டிருக்கிறது.குறிப்பா



