
விருத்தாசலம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகே இருந்த பெட்டி கடை அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்க்கையில் தனது இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் விஜயின் காணாமல் போன விஜயின் இருசக்கர வாகனத்தை பெரிய கண்டியங்குப்பம் அருகே ஓட்டி சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயின் நண்பர்கள் பெரிய கண்டியாங்குப்பம் மற்றும் சின்ன கண்டியா குப்பம் கிராம பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனம் சொந்தக்காரரான சின்ன கண்டியங்குப்பத்தை சேர்ந்த விஜய்க்கும் தகவல் அளித்துள்ளனர்.அங்கு வந்த விஜய் மற்றும் பெரிய கண்டியங்குப்பம் கிராம பொதுமக்களும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்ட நபர் முன்னுக்கு பின்னாக கொடுத்த தகவலினால் கோபம் அடைந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விசாரித்ததில் அவர் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரைச் காந்திநகர் மாரியம்மன் கோவிலை தெருவை சேர்ந்தவர் வீரமணிகண்டன்(27) என்பதும் காணாமல் போன விஜயின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கட்டிவைத்து தர்மஅடி கொடுத்த பெரிய கண்டியாங்குப்பம் மற்றும் சின்ன கண்டியங்குப்பம் கிராம பொதுமக்கள் விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் பகுதிக்கு விரைந்து வந்து அவரை, அவர் திருடிய அதே இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மோட்டார் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை பொதுமக்களே பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் விருத்தாசலம் பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



