Robbery: 2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

Advertisements

மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சி!

விருத்தாசலத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து  ரூ.4½ லட்சம் மதிப்பிலான  நகை மற்றும் பணத்தை  கொள்ளையடித்த  மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீச்சி தேடி வருகின்றனர்.*

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திராநகரை சேர்ந்த காசிராஜன் என்பவர், குடும்பத்துடன் சென்னையில் தங்கி தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விருத்தாசலத்தில் உள்ள இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து  அங்கிருந்த  நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் காவேரி வீதியை சேர்ந்த ஒய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி ராஜேந்திரன் (65) என்பவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 3 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில், தடயங்கள் சேகரிக் கப்பட்டன. தொடர்ந்து இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

2 வீடுகளில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *