
புதுச்சேரி வீதிகளிலும் மாட்டு வண்டிகளில் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.
புதுச்சேரி: 60 ஆண்டுகளுக்கு முன்பு புதிய படங்கள் திரையங்குகளுக்கு வரும்போது பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் ஆட்டோ, ரிக்ஷா, மற்றும் மாட்டு வண்டிகளில் போஸ்டர்களை ஒட்டி, துண்டு பிரசுரங்களைக் கொடுத்து விளம்பரம் செய்வார்கள்.
அதே போன்று அந்தக் கால சினிமா விளம்பரங்களை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இன்று கழு மரம் படக் குழுவினர் மாட்டு வண்டியில் போஸ்டர்களை ஒட்டிக் கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கியில் மைக் செட் போட்டு அனைவரையும் படம் பார்க்கக் கூவி கூவி அழைத்தனர்.
யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கொட்டாச்சி இயக்கி நடிக்கும் கழு மரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.
புதுச்சேரி வீதிகளிலும் மாட்டு வண்டிகளில் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.
சினிமா போஸ்டர் ஒட்டிய மாட்டு வண்டி வீதி வீதியாகச் செல்லும்போது அதைப் பார்த்த பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.



