இந்தியாவில் இனி நக்சல் தாக்குதலுக்கு இடமில்லை – அமித்ஷா!

இந்தியாவில் இனிமேல் நக்சல் தாக்குதலுக்கு இடமில்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடியின் சிறப்பான தலைமையின் கீழ் இந்தியா முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் மோதல், அமெரிக்கா – ஈரான் போர்கள் காரணமாக பல நாடுகளின் வளர்ச்சி குறைந்துள்ளதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் நக்சல் தாக்குதல் 2 ஆயிரம் முறை நடந்ததாகத் தெரிவித்தார். இனிமேல் நக்சல் தாக்குதலுக்கு இடமில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறினார்.  சந்திரபாபு தலைமையில் ஆந்திரா இரவு பகலாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஆந்திரா மிகவும் வளர்ந்த மாநிலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *