ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் தலைநகா் மாஸ்கோ பிராந்தியத்தில் இரவு உக்ரைன் ராணுவம் 600 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இதில் 191 ட்ரோன்கள் நகரை நெருங்கியபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயா் சொ்ஜி சோபியானின் தெரிவித்தாா். மேலும், தெற்கு கிராஸ்னோடா், ரோஸ்டோவ் பிராந்தியங்களில் உள்ள எண்ணெய் கிடங்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொத்தம் 9 போ் காயமடைந்ததாக உள்ளூா் அதிகாரிகள் கூறினா். கடந்த நான்கரை ஆண்டுகால போரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

