Advertisements

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளும் அங்கேயே தொடரும் என்று அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டல பகுதியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ராணுவ வீரர்களிடம் பேசிய அவர், லெபனானில் நீங்கள் மிகச் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளதோடு, அங்குப் பாதுகாப்பு வளையங்களையும் உருவாக்கியுள்ளீர்கள் என்று தெரிவித்தார். நமது எல்லைப் பகுதியில் பயங்கரவாத ராணுவம் இருப்பதை நாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதே இதன் அர்த்தம் என்று கூறினார்.
மேலும், அவர்களை எல்லைக்கு வெளியேற்றும் பணியையே நீங்களும் தற்போது செய்து வருகிறீர்கள் என்று தெரிவித்தார். லெபனானில், ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளும் அங்கேயே தொடரும் என்று தெரிவித்தார். அந்த அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்படும் வரை தாங்கள் தெற்கு லெபனானை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் கூறினார்.
Advertisements




