
கடந்த சில தினங்களாகவே அதிமுக -பாஜக- தவெக கூட்டணி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் , தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணி அமைத்து திமுக உட்பட எந்தக் கட்சியும் வென்றதே இல்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
பாஜக உடன் கூட்டணி அமைத்து 2001ல் போட்டியிட்ட திமுகவும் தோல்வி அடைந்துவிட்டதாக கூறிய டிகேஎஸ் இளங்கோவன், விஜய் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது எங்களுக்கு நல்லதுதான் என்றும் கூறியுள்ளார்.இது குறித்த பின்னணி தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்…
விஜய்யின் தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும்போது அவருக்கு NDA கூட்டணியில் இணைய மனம் இருந்தாலும் , அவர் மேல் விமர்சனங்கள் அதிகம் வரும் என்று யோசிக்கிறார்..இந்நிலையில் , கட்சி ஆரம்பிக்கும்போதே திமுக அரசியல் எதிரி , பாஜக கொள்கை எதிரி என்று அரசியலுக்கு வரும்போதே திராவிட கட்சிகளை எதிர்த்து தான் மேடைகளில் பேசினார்…
இந்நிலையில் தான் , இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்… அப்போது , தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், வாக்காளர்களை எப்படி அணுக வேண்டும், SIR பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கட்டாயமாக இதுவரை நடந்த எல்லா தேர்தலில்களிலும் திமுக வேட்பாளர், கூட்டணி வேட்பாளர் என்ற பாரபட்சம் பார்க்கப்பட்டதில்லை. அப்படி பாரபட்சமாக செயல்பட்டிருந்தால், லோக்சபாவில் 40க்கு 40 வென்றிருக்க மாட்டோம். திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களாகவே கருதி பணியாற்றி வருகிறோம். திமுகவில் விருப்ப மனு கொடுத்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்படும்.
அந்த தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு இருந்தால், அதனையும் அவர்களிடம் எடுத்து கூறுவோம். அதேபோல் பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால், அது திமுகவுக்கு நல்லதுதான். ஏனென்றால் பாஜக உடன் கூட்டணி அமைத்து யாரும் வென்றதே இல்லை.. திமுகவை சேர்த்தே சொல்கிறேன்.. பாஜக உடன் கூட்டணி அமைத்து 2001ல் திமுகவே தோல்வி அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் , தேர்தலுக்கு பரப்புரை , தேர்தல் வாக்குறுதிகள் , தொகுதி பங்கீடு எவ்வளவு முக்கியமோ , அந்த அளவுக்கு கூட்டணியும் முக்கியம் ..அந்த வகையில் எந்த கட்சிகளிலும் சேராமல் தனித்தே நின்றுகொண்டிருக்கும் தவெக – விடம் பாஜக வைக்கும் ஒரே கேள்வி , “மத்தியில் நாங்க, மாகடந்த சில தினங்களாகவே அதிமுக -பாஜக- தவெக கூட்டணி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியது.
குறிப்பாக விஜய்க்கு 51 சீட்டுகள்,துணை முதலமைச்சர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஒரு வருடம் முதல்வர் பதவி என பல்வேறு ஆபர்களை அமித்ஷா எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்க்கு அழுத்தத்தை தரும் வகையில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் உள்ளிட்ட விவகாரங்களையும் பாஜக கையில் எடுத்தது.
இந்நிலையில் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் , NDA கூட்டணி உடன் விஜய் இணைந்தால் எப்படி இருக்கும்.. ஒரு வேலை அப்படி இணைந்தால் NDA – கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடும் என்ற அச்சத்தில் தான் டிகேஎஸ் இளங்கோவன் இப்படி பேசினாரா என்பது குறித்த உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்…




