Advertisements

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் 10 ஆவது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய பெத் மூனி 61 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Advertisements



