வணிக எரிவாயு விலை குறைப்பால் வணிகர்கள் மகிழ்ச்சி!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை 172 ரூபாய் குறைந்திருப்பது, வணிகர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவிய போர் பதற்றங்கள் காரணமாக, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் எரிவாயு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், எரிவாயு சிலிண்டரின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
இதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை 172 ரூபாய் 50 காசு குறைந்து 3 ஆயிரத்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட சமையில் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி 957 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *