Advertisements

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்வதற்கு டெல்லி மேலிடம் முடிவெடுத்துள்ளது . இதன்படி முதல் கட்டமாக தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து திட்டமிடப்பட்டு ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது . ஏற்கனவே மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் துணைத் தலைவர்கள் பொருளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர்
இந்த நிலையில் மாநில அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க டெல்லி மேலிட பாஜக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது . அந்த வகையில் எட்டு மாநில துணைத்தலைவர்கள் எட்டு மாநில செயலாளர் நான்கு மாநில பொதுச் செயலாளர்கள் ஒரு பொருளாளர் பதவி என 21 பதவிகளுக்கு தேர்வு நடைபெற்று வந்தது . இது குறித்த நிர்வாகிகள் பட்டியலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தயார் செய்து டெல்லி மேலிடத்தில் வழங்கி இருக்கிறார்
அதன்படி தமிழக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களான அண்ணாமலை வானதி சீனிவாசன் தமிழிசை சௌந்தரராஜன் பொன் ராதாகிருஷ்ணன் எச். ராஜா உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பெயர் அதிக அளவில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது . இதன் அடிப்படையில் ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம் தேர்வு செய்து 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு நேரில் சென்று அளித்துள்ளார்
இந்த பட்டியல் குறித்து தேசிய தலைவர் ஜே பி நெட்டா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர் . இந்த வகையில் நடிகர் சரத்குமார் நடிகை குஷ்பூ நடிகை மீனா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது
இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Advertisements

