ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ – ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆளுநா் மாளிகையில் எண்ணித் துணிக’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி. கலந்து கொண்டு  தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது அவர், ஜப்பான், சீனா, ரஷியா, ஜொ்மனி போன்ற நாடுகள் அறிவியலில் கொடிகட்டிப் பறப்பதாக கூறினார் . ஆனால், அதை அவா்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை என்று கூறினார். மேலும்  ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால், அதை மேன்மையான மொழியாகக் கருத வேண்டாம் என கூறினார். ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்றும் பாரதத்தின் அழகு இங்குள்ள பல தாய்மொழிகள் என கூறினார்.  மேலும், ஒவ்வொரு மொழியும் மலர வேண்டும். மொழி என்பது பண்பாடு, கலாசாரத்தின் அடையாளம். இதற்கு தமிழ் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *