லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – உலக நாடுகள் கவலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள கஃபார் ருமான் நகர் அருகே, சென்றுக் கொண்டிருந்த  வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் அரசின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஹிஸ்புல்லா தீவிரவாத குழு, இது இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு மீறல் எனத் தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பிளவு ஏற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. மேலும், போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *