ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கு – பிரதமர் மோடி பங்கேற்பாரா?

Advertisements

காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்று உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து திடீரென போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரான் உச்சபட்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அடுத்த மாதம் 5 முதல் 9 ஆம் தேதி வரை ஈரானில் நடக்கிறது.
டெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் 5 முதல் 7 ஆம் தேதி வரை இறுதிச்சடங்கு நிகழ்வுகளும், 9 ஆம் தேதி மசாத் நகரில் நல்லடக்கமும் நடக்கிறது. இதில், பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்து உள்ளது. இதன்படி பிரதமர் மோடிக்கும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இதை மத்திய அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதனால், காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்று உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *