“பேச்சுவார்த்தை என்றால் சரண் அடைந்ததாக அர்த்தமல்ல : ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் அதிரடி…!”

சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நாங்கள் சரண் அடைந்து விட்டோம் என பொருள் அல்ல என்று ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில், நாங்கள் எதிரியின் முன் எப்போதும் தலை வணங்க மாட்டோம் என்று கூறினார்.
சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நாங்கள் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்று தெரிவித்தார். ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், உறுதியான வலிமையுடன் தேச நலன்களை பாதுகாப்பதே தங்களுடைய இலக்காகும் என்று தெரிவித்தார்.
ஈரான், தன்னுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறினார்.
எனவே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் வகையில், பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *