
ஐயா வைகுண்டர் அவதார நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை நினைவுகூர்ந்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்தள்ள அறிக்கையில் இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் என்று தெரிவித்துள்ளார்.
“கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரமாக இருங்கள்” எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



