United Nations: “பாரத்” என பெயர் மாற்றம்குறித்து கருத்து!

இந்தியாவின் பெயர் மாற்றம்குறித்து ஐ.நாக் கருத்து தெரிவித்துள்ளது…

வாஷிங்டன்: இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றும் படி கோரிக்கை வந்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நாச்சபை தெரிவித்துள்ளது.

‘ஜி – 20’ மாநாட்டுக்கான விருந்து அழைப்பிதழில், ‘தி பிரசிடென்ட் ஆப் இந்தியா’ எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக, ‘தி பிரசிடென்ட் ஆப் பாரத்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பா.ஜ., முயற்சிக்கிறது’ என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள வார்த்தையைப் பயன்படுத்துவதில் என்ன தவறு’ என, பா.ஜ., தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.

இந்நியா பெயர் மாற்றம்குறித்து, ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவதாவது: கடந்த ஆண்டு துருக்கி தனது பெயரை மாற்றியது. துருக்கி விஷயத்தில் அரசாங்கம் எங்களுக்கு வழங்கிய கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம். அதேபோல் இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றும் படி கோரிக்கை வந்தால் பரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *