Advertisements

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 58 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 58 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதில், பிரப்சிம்ரன் சிங் 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 75 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Advertisements




