சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..!

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கியது வும் 11ஆம் தேதி பம்பை நதியில் ஆறாட்டு வைபவம் நடைபெறுகிறது உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி ஆறாட்டு வைபவத்துடன் க நடைபெறுவது வழக்கம் இதையடுத்து இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் திருநடைதிறக்கபட்டது , அதைதொடர்ந்து இன்று  பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது முன்னதாக கொடிமரத்திற்கு ஆலய தந்திரி கண்டரூ ராஜீவரரூ சிறப்பு பூஜைகள் செய்ததுடன் திருகொடியேற்றிவைத்தார்.

தொடர்ந்து 10நாள்களின்   தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவ பலி, இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10-ம் தேதி  சரம்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்வும்  விழாவின் முக்கிய  நிகழ்வாக 11-ம் தேதி காலையில்  யானை மீது சாமி எழுந்தருளி   பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆறாட்டு வைபவம்   நடைபெறுகிறது தொடர்ந்து இடவமாத பூஜைக்காகவும் நடைதிறந்துவைக்கபடுவதுடன் 18நாட்கள் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கபட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *